Tamilnadu

“அனுமதியை மீறி பாறைகளை வெட்டி எடுத்த கல்குவாரிகள்”: கனிமவளத்துறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம் மற்றும் 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே கைப்பற்றட்ட ஆவணங்களில் திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரியில் அனுமதியை மீறி அதிக அளவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்து திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி குத்தகைதாரர்களின் பெயரில் செயல்படுகிறது. இந்த குவாரிக்கு அரசு அனுமதி அளித்த அளவை விட 1,02,241 கன மீட்டர் அளவிற்குக் கற்களும், 71,912 கன மீட்டர் அளவிற்கு கிராவல் மண் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ல் சுப்பையா என்ற குத்தகைதாரருக்கு ரூ.6.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்குச் சொந்தமான 6 குவாரிகள் 16 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Also Read: 5 கிலோ தங்கம், ரூ.23 லட்சம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு சோதனையில் மாட்டிக்கொண்ட விஜயபாஸ்கர்!