Tamilnadu

"பெண்களின் திருமண வயதை 21 ஆக விரைவில் உயர்த்த வேண்டும்" : ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி கோரிக்கை!

தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார்.

பின்னர் இந்த முகாமில் கனிமொழி எம்.பி பேசுகையில், "குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் தவறிவிட்டனர். குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, மனதைப் பாதிக்கும் வகையில் பேசுவது ஆகியவை குற்றமாகும். அவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொண்டாலும், ஆசிரியர்கள் நடந்து கொண்டாலும் அது குற்றம்தான். கொரோனாவில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன.

குழந்தைகளைத் தைரியம், தன்னம்பிக்கையுடன், சொந்தக் காலில் நிற்கும் உறுதி உள்ளவர்களாக வளர்ப்பது பெற்றோரின் மிகப்பெரிய கடமையாகும். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. இதை விரைவாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்.

குழந்தைகளின் திருமணத்தைத் தடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் குழந்தை திருமணங்களைத் தடுக்க வேண்டும். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கடப்பாக்கம் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு; மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மாணவர்கள்!