Tamilnadu
தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் சென்று தொட முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது என்றும், மின் சாதண பொருட்களை பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்ப்பதோடு, வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB யை பொருத்தினால் மின் விபத்துகளில் இருந்து தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஈரக்கைகளால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது என்றும், மின் சாதணங்களை பயன்படுத்தும் போது நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட்டு பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்ப்பதோடு, மின் கம்பங்களை பந்தல்களாகவோ, விளம்பர பலகைகளாகவோ பயன்படுத்தக்கூடாது என்றும், கட்டிடங்களை கட்டும்போது போதுமான இடைவெளி உள்ளதா என்பதை தெரிந்துக்கொண்ட பின் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் மின்வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விழாக்காலங்களில் மின் பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் தேர் மற்றும் பல்லக்கு இழுக்கும் போது முன்கூட்டியே மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவித்து முன்னேற்பாடுகளை மேற்கொள்வதோடு, பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரீல்களில் அலங்கார சீரியல் விளக்குகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!