Tamilnadu

கவரிங் நகையை கொடுத்து ஆரணி கூட்டுறவு வங்கியில் ₹2.51 கோடி கொள்ளை; அதிமுக நிர்வாகியிடம் தீவிர விசாரணை!

ஆரணி கூட்டுறவு வங்கியில் சுமார் 2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலான 8.4 கிலோ தங்கம் நகையை போலியாக வைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மேலாளர் உட்பட 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு துறை இணை இயக்குநர் உத்தரவு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தேவிகாபுரம் ஆரணி சாலையில் உள்ள கூட்டுறவு நகர வங்கி ஆரணி கிளை இயங்கி வருகின்றன. இதில் வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நகை மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் நூதன முறையில் சுமார் 8.4 கிலோ தங்கம் நகையை சுமார் 2 கோடியே 51 லட்சம் ரூபாயை போலி நகையை வைத்து கொள்ளையடித்துள்ளார்.

மேலும் வேலூர் கூட்டுறவு மண்டல அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆரணி கிளை வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் போலியாக நகை வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தன. இதனையொடுத்து செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை இணை பதிவாளர் ராஜ்குமார் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா காசாளர் ஜெகதீசன் கிளார்க் சரவணன் நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர், அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார், துணை தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகிய 2 பேரிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட நடவடிக்கையாக மேலாளர் உள்ளிட்டவர்களின் சொத்துகளை முடக்கி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read: "அவதூறாக ட்விட்டர் பதிவு": ரூ.500 கோடி கேட்டு அண்ணாமலை மீது BGR நிறுவனம் நஷ்ட ஈடு வழக்கு!