Tamilnadu

"கூட்டுறவு பண்டக சாலையில் 4.5 கோடி மோசடி செய்த அ.தி.மு.க": பதிவாளரிடம் தொ.மு.ச புகார்!

சிவகங்கை மாவட்டத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (பாம்கோ) செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு பண்டக சாலையில் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் பலர் நிர்வாகிகளாக உள்ளனர்.

இந்த பண்டக சாலையில் கிடைத்த வருமானம் மற்றும் அரசின் மானியம் மூலம் கிடைத்த தொகையில் ரூ.7 கோடி வரை மாவட்ட கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் இளையான்குடி நகர கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இந்த பணத்தில் சுமார் 4.5 கோடி ரூபாயை வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாநில பதிவாளரின் அனுமதி இல்லாமல் தரம் குறைவான சேமியாவைக் கொள்முதல் செய்ததன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தீபஒளி பண்டிகைக்காகத் தரமில்லாத பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடிகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (பாம்கோ) பணியாளர்கள் தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில், கூட்டுறவுச் சங்கங்களின் மாநில பதிவாளருக்குப் புகார் மனு அளித்துள்ளனர்.

Also Read: 10 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்.. காட்டி கொடுத்த செல்போன் சிக்னல்: நடந்தது என்ன?