Tamilnadu
"பா.ஜ.க ஆட்சியை வல்லமை கொண்ட திராவிட இயக்கம் விரட்டி அடிக்கும்": கனிமொழி என்.வி.என் சோமு MP பேச்சு!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் "இருவிழா" எனும் தலைப்பில் "வி திராவிடியன்ஸ்" (We Dravidians) அமைப்பின் ஆறாவது ஆண்டு விழா மற்றும் Why Do We Need MKS as PM of India? என்னும் ஆங்கில புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழச்சியில், Why Do We Need MKS as PM of India? என்னும் ஆங்கில புத்தகத்தை பொருளாதார அறிஞரும் மாநில திட்டக்குழு துணைத்தலைவருமான ஜெ.ஜெயரஞ்சன் வெளியிட, மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்.எம் அப்துல்லா மற்றும் கனிமொழி என்.வி.என் சோமு ஆகியோர் பெற்றுகொண்டனர்
பின்னர், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு பேசுகையில்," முதலமைச்சரின் வாழ்க்கை பயணம் கலகத்துடனே இருந்துள்ளது. அரசியல் அதிகாரத்தை எதிர்பார்க்காதவர் தற்போதைய முதல்வர். கட்சியின் கொள்கையை தமிழ்நாடு இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தவர் முதல்வர் ஸ்டாலின்.
இதேபோல் இந்திய இளைஞர்களுக்கு திராவிடத்தின் கொள்க்கையை கொண்டு சேர்க்க தமிழ்நாடு முதல்வர் இந்திய நாட்டின் பிரதமாராக வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அட்சியில் சீரழிந்த சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி வருபவர் தமிழ்நாடு முதல்வர். அனைத்து மக்களுக்கும் அனைத்து கிடைக்கவேண்டும் என்பது முதல்வரின் எண்ணம்.
அதே போன்று இந்திய நாட்டுமக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு முதல்வர் இந்திய பிரதமராக வரவேண்டும். இந்திய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு முதல்வர் பிரதமராக வர வேண்டும். அதற்க்கு முதல்படியாக Why Do We Need MKS as PM of India? இந்த புத்தகம் அமைந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியை வல்லமை கொண்ட திராவிட இயக்கம் விரட்டி அடிக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர்கள் அப்துல்லா பேசும்போது, "தற்போதைய இந்திய நாட்டை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்றால் தமிழ்நாடு முதல்வர் இந்திய பிரதமராக வரவேண்டியது மிகவும் அவசியம். மக்களை ஒருங்கினைத்து அதன் வழியில் பல்வேறு திட்டங்களை வெளியிட்டு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது திராவிட அரசு. இலவசங்கள் மூலம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளோம். முடியாததை முடித்து காட்டியவர் தமிழ்நாடு முதல்வர்"என்றார்.
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் பேசுகையில்,"மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்றவாரு நாட்டின் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் ஒன்றிய அரசு இதற்கு மாறாக செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதன் மூலம் ஒன்றிய அரசு நாட்டின் வளர்ச்சியை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது.
மக்களின் தேவையை அறிந்து ஆதற்க்கேற்றவாரு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் முதல்வராக தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மானுடம் சிறக்க தொடர் போராட்டங்களை செயல்படுத்த வேண்டும். மானுடம் செழிக்க திராவிடம் வளர வேண்டும் தமிழ்நாடு முதல்வர் இந்திய நாட்டின் பிரதமராக உருவாக்குவதன் மூலம் திராவிடம் இந்திய நாட்டை ஆளும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நூலாசிரியர் கதிர் ஆர்.எஸ், எழுத்தாளர் ஏ.ஏஸ் பன்னீர்செல்வன், எழுத்தாளர் கோவை லெனின், எழுத்தாளர் டான் அசோக், பாலிவுட் திரைப்பட நடிகர் ஆதித்யாஓம், பரதநாட்டிய கலைஞர் கலைமாமணி ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !