Tamilnadu
“எங்களுக்கு நிறைய வேலை இருக்குங்க அண்ணாமலை..” : அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னகம் - நுகர்வோர் சேவை மைய செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள சிலர் அவதூறான தகவல்களை வெளியிடுகிறார்கள். அண்ணாமலை வேலையில்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
குறிப்பாக, குற்றச்சாட்டு சொல்லும் அண்ணாமலை ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார். எப்போது எங்கே அவர் அதை வெளியிட்டாலும் நான் வர தயார். ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும் சமூக வலைதளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது. அதுவும் பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்தக்கூடாது. அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.
மேலும் அரசின் மீது ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்ட பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?