Tamilnadu
”என்ன குறை இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க” - காவலர்களுக்கு நம்பிக்கையளித்த டிஜிபி சைலேந்திரபாபு!
சென்னையிலிருந்து சைக்கிளிங் செய்து பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு சென்று காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு.
தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனராக இருக்கும் சைலேந்திரபாபு இன்று காலை சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு, பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார்.
திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகம் வந்த போது அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். 25 ஆண்டுகளாக தீயணைப்பு வீரர்களாக பணிப்புரிந்தவர்களை சிறப்பு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் தெரிவித்து பெற்றுத் தந்தமைக்கு திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு சென்ற போது திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் அதிகாரிகள் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, தங்களது குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என கூறிய அவர் உள்ளே சென்று சிறையை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
மகளிர் காவல் நிலையத்திலும் குறைகளை கேட்டறிந்த அவர், காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தாரையும், அவர்களது குழந்தைகளிடமும் கலந்துரையாடி புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் சிலம்பாட்டம் ஆடிய சிறுவனுக்கும் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டினார். எந்த குறையாக இருந்தாலும் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?