Tamilnadu

8 நாட்களாக போக்குக் காட்டிய T23 புலி; போஸ்பராவில் தென்பட்டது எப்படி? அங்கு சென்றது ஏன்?

மசினகுடி, சிங்காரா வனப் பகுதியில் கடந்த 17 நாட்களாக தேடப்பட்டு வந்த T23 புலி தனது வாழ்விடமான போஸ்பர வனப்பகுதியில் முகமிட்டுள்ளதை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து T23 புலி போஸ்பர பகுதியில் நடமாடி வருதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த T23 புலி தற்போது தனது வாழ்விடமான போஸ்பரா வனப்பகுதிக்கு சென்றதை வனத்துறையினர் தானியங்கி கேமரா பதிவை வைத்து உறுதி செய்தனர்.

கடந்த பதினேழு நாட்களாக மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் தமிழக கேரளா வனத்துறையினர் டி23 புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள் உதவியுடன் புலியை தேடிவந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக வனப்பகுதியில் வைக்கப்பட்ட 85 தானியங்கி கேமராவில் புலி தென்படாமல் இருந்தது.

இந்நிலையில் எட்டு நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை, கடந்த பதிமூன்று ஆண்டுகளாக தான் வாழ்ந்து வந்த போஸ்பரா வனப்பகுதிக்கு சென்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து டி23 புலி இருக்கும் இடத்தை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவக்குழு, வனத்துறையினர் விரைந்தனர்.

Also Read: வாழைத் தொழிலாளிக்கு ரூ.4 கோடி வழங்கிய ஆஸ்திரேலிய நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா?