Tamilnadu
போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்கள் மத்தியில், களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட தி.மு.க அமைச்சர்!
தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. மேலும் கால்வாய்களை விரைந்து தூர்வாரி, சாலைகளில் மழை தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் பல்வேறு இடங்களுக்குச் சென்று கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அதேபோல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து, வட்டாட்சியர் அலுவலகம் வரை சாலையில் உள்ள குப்பைகள் மற்றும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இந்த பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு செய்தார். அப்போது, தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசனும் சாலையோரம் இருந்து முட்புதர்களை அகற்றினார்.
மேலும், கால்வாயிலிருந்து அகற்றப்பட்ட மண்ணை அமைச்சரே சட்டியில் எடுத்து தலையில் சுமந்து சென்றார். இதைப்பார்த்த தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்து அவரை பாராட்டினர். அதேபோல், நெடுஞ்சாலைப் பணியாளர்களுடன் சேர்ந்து காலை உணவை அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இந்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இதேபோல், பெண்ணாடம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !