Tamilnadu
ஈ சாலாவும் கப் இல்லை.. நரைனிடம் வீழ்ந்து தொடரை விட்டு வெளியேறிய பெங்களூரு!
பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் சுற்று போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணி டெல்லிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் ஆடுவதற்கு தகுதிப்பெற்றுள்ளது. பெங்களூர் அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
பெங்களூர் அணியை பொறுத்தவரைக்கும் இந்த போட்டி ரொம்பவே முக்கியமானதாக கருதப்பட்டது. ஏனெனில், கேப்டனாக விராட் கோலிக்கு இதுதான் கடைசி சீசன். அதனால் இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருந்தனர்.
கோலி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார்.
இரண்டு அணிகளிலுமே எந்த மாற்றமும் இல்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ப்ளேயிங் லெவனோடுதான் களமிறங்கினார்கள்
கடந்த சீசனில் எலிமினேட்டரில் சென்று கோலி ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்களை செய்திருப்பார். அது பெரும் தோல்வியாக முடிந்தது. இந்த முறை அந்த தவறை செய்யவில்லை. இதுவே RCB க்கு முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது.
ஷார்ஜாவில் வைத்து இந்த சீசனில் 8 போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இதில், 5 போட்டிகளில் சேஸ் செய்த அணிதான் வென்றிருக்கிறது.
இன்னொரு விஷயமும் கூட, அதாவது ஷார்ஜாவில் 140 தான் ஆவரேஜ் ஸ்கோர் என சொல்லியிருந்தேன். ஆனால், கொல்கத்தா கடைசியாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கேதான் ஆடியிருந்தது. அதில் 171 ரன்களை முதல் பேட்டிங் செய்து எடுத்திருந்தது.
இந்த சீசனில் ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் அதுவே. இவையெல்லாம் ஆர்சிபிக்கு பாதகமான விஷயங்களாக இருந்தது.
ஆர்சிபி சிறப்பாகவே பேட்டிங்கை தொடங்கியிருந்தது. பவர்ப்ளேயில் மட்டும் 53 ரன்களை எடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்தனர். படிக்கல் 21 ரன்களில் அவுட் ஆகியிருந்தாலும் கோலி நல்ல டச்சில் ஸ்கோர் செய்து கொண்டிருந்தார். இதன்பிறகுதான் வீழ்ச்சியே தொடங்கியது.
மிடில் ஓவர்களில் பந்தை சுனில் நரைனின் கையில் கொடுத்தார் மோர்கன். 4 ஓவர்களை வீசிய நரைன் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்குமே முக்கியமான விக்கெட்டுகள். பரத், கோலி, மேக்ஸ்வெல், டீ வில்லியர்ஸ் என ஆர்சிபியின் முதுகெலும்பையே முறித்து போட்டார்.
இதன்பிறகு, ஆர்சிபியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
கொல்கத்தாவுக்கு டார்கெட் 139. ஷார்ஜா மைதானம் என்பதால் இந்த ஸ்கோரை டிஃபண்ட் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடனேயே களமிறங்கியது. கொல்கத்தாவும் பெங்களூருவை போன்றே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பெங்களூருவின் கை ஓங்குவதை போல தெரிந்தது.
ஆனால், திடீரென நம்பர் 5 இல் சுனில் நரைனை இறக்கிவிட்டார்கள். அவர் உள்ளே வந்து டேன் கிறிஸ்டியனின் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் அடித்தார். அங்கேயே மேட்ச் முடிந்துவிட்டது. அதன்பிறகு கடைசி ஓவர் வரை சம்பிரதாயத்துக்குதான் நீண்டது. சிராஜ் 19 வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியும் பிரயோஜனமில்லை. கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சுனில் நரைன் பௌலிங்கில் ஒரு ஸ்பெல் பேட்டிங்கில் ஒரு ஓவர் இதற்குள்ளேயே மேட்ச்சை முடித்துவிட்டார்
'கேப்டன்' கோலி தனது கடைசி ஐ.பி.எல் தொடரையும் கோப்பையை வெல்ல முடியாமல் தோற்றிருக்கிறார். ஈ சாலாவும் கப் இல்லை!
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!