Tamilnadu
மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் மோடி அரசு.. NIEPMD நிறுவனத்தை மாற்றத் துடிப்பது ஏன்? - பகீர் பின்னணி!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1974 ஆம் ஆண்டு தொடங்கி ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த நிறுவனம் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு தொடர்பான இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் பட்டயப்படிப்புகள் போன்றவற்றையும் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெற்காசியாவிலேயே ஒரே ஒரு நிறுவனமாக ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களின் மேம்பாட்டிற்காக சேவை செய்துவரும் இந்த நிறுவனத்தை தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் செயல்பட்டு வரும் NIEPID நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட அதாவது 21 வகையான குறைபாடுகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தை, ஒரே ஒரு குறைபாடுக்கு (மனநலம்) சிகிச்சை அளித்து வரும் ஒரு நிறுவனத்துடன் இணைக்க முயற்சிப்பது முறையா என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படும் இந்த நிறுவனம் வேறு மாநிலத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய முடிவுகளையும் மருத்துவ சிகிச்சைக்கு மற்றும் படிப்புக்கான அனுமதி போன்றவற்றையும் இனி செகந்திராபாத்தில் உள்ள தலைமையகத்தில் கேட்டுப்பெற வேண்டிய சூழல் உருவாகும் என சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!