Tamilnadu
தொடர் தேடுதல் வேட்டை... துப்பாக்கியுடன் காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையன் என்கவுன்டர்.. நடந்தது என்ன?
ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய போலிஸார், கொள்ளையர்களில் ஒருவனை இன்று என்கவுன்டர் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூர் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் நேற்று பென்னலூர் பேருந்து நிறுத்தத்தில் காத்து காத்திருந்தபோது, 2 வடமாநில வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயன்றனர்.
அப்போது அப்பெண் கூச்சலிட்டதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பின்வாங்கியதும், வழிப்பறி கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் ஓடி மறைந்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்டஎஸ்.பி மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, காஞ்சிபுரம் மாவட்டஎஸ்.பி சுதாகர் ஆகியோர் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. போலிஸார் கொள்ளையர்களை வலைவீசித் தேடி வந்தனர்.
இதற்கிடையே கொள்ளையர்கள் தப்பி ஓடும்போது துப்பாக்கியில் இருந்து கீழே விழுந்த தோட்டாக்களை போலிஸார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் போலிஸார் ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது தலைமைக் காவலர் மோகன்தாஸை கொள்ளையன் ஒருவன் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதால் போலிஸ் என்கவுண்டர் செய்ததில் கொள்ளையன் உயிரிழந்தான்.
சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையன் ஜார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த முர்தஷா என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைதான மற்றொரு கொள்ளையன் நைம் அக்தரிடம் இருந்து துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலிஸார் கைப்பற்றினர்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?