Tamilnadu
“மின்சாரம் தாக்கிய மகனும் காப்பாற்ற சென்ற தந்தையும் பரிதாப பலி”: அரியலூரில் நடந்த சோகம்!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது குடும்பத்துடன் காட்டுப்பகுதியில் வீடுகட்டி விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகை கடையில் வேலை செய்துவந்த, இவரது மகன் சங்கர் வேலை முடித்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால் வீட்டிலிருந்த முருங்கை மரம் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் வீட்டிற்கு வந்த சங்கர் மின் கம்மியை மிதித்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
பின்னர், சத்தம் கேட்டு வெளியே வந்த முத்துசாமி மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து மகனைக் காப்பாற்றச் சென்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தந்தை, மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?