Tamilnadu
“பேருந்தில் புகை பிடித்தைக் கண்டித்த அரசு ஓட்டுநர் மீது தாக்குதல்” : அடாவடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!
சென்னை, அரசன்கழனி, வாஜ்பாய்தெருவில் வசித்து வருபவர் குமார்(49), இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். குமார் செம்மஞ்சேரியிலிருந்து கிண்டி நோக்கி சென்ற தடம் எண் 119 என்ற பேருந்தில் கடந்த 4ம் தேதி மதியம் 1.50 மணியளவில் ஓட்டுநர் பணியிலிருந்த போது, பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த நபர் ஒருவர் சிகரெட் புகைத்துள்ளார். உடனே ஒட்டுநர் குமார் அவரிடம் சிகரெட் புகைக்க கூடாது என்று கண்டித்துள்ளார்.
உடனே சிகரெட் புகைத்த நபர் ஓட்டுநரை அவதூறாக பேசிவிட்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி அருகிலிருந்த தனது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு. இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின்தொடர்ந்து சென்று, தரமணி, பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி ஓட்டுநர் குமாரை இருவரும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து பேருந்து ஓட்டுநர் குமார் தரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது பள்ளிகரணையை சேர்ந்த பரத்ராஜ்(19), என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய இளஞ்சிறார் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!