Tamilnadu
மேட்ரிமோனியில் அறிமுகமாகி ரூ.1.25 லட்சம் மோசடி.. டிமிக்கி கொடுத்த இளைஞரை வெளுத்தெடுத்த இளம்பெண்!
மேட்ரிமோனி இணையதளம் மூலம் அறிமுகமாகி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞரை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்துத் துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் திருமணத்துக்காக மேட்ரிமோனியில் தன்னுடைய விவரங்களை பதிவு செய்து வரன் தேடி வந்துள்ளார்.
மேட்ரிமோனி மூலம் கோகுல கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி பேசிவந்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அப்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி கோகுல கிருஷ்ணன் நெருக்கமாக இருந்துள்ளார். இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்ற கோகுல கிருஷ்ணன் சுமார் 1.25 லட்சம் பணத்தை பல்வேறு காரணங்களை கூறி அந்தப்பெண்ணிடம் இருந்து பெற்றுள்ளார்.
தொடர்ந்து, திருமணத்தை தாமதப்படுத்தி வந்த அந்த இளைஞர் பின்னர் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரிடம் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வருமாறு கோகுலகிருஷ்ணனை அழைத்துள்ளார் அப்பெண். அப்போது திருமணம் குறித்து பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் அப்பெண்ணின் ஆடையை கிழித்து தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் கோகுல கிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். அந்தப்பெண்ணும் துடைப்பத்தால் வெளுத்தெடுத்துள்ளார். இதனை உறவினர்கள் படம் பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது
இதற்கிடையே, பெண்ணின் உறவினர்கள் கோகுல கிருஷ்ணன் மீது போலிஸில் புகார் அளித்தனர். அப்பெண் தன்னை ஏமாற்றி வரவழைத்து தாக்கியதாக கோகுல கிருஷ்ணனும் போலிஸில் புகார் அளித்துள்ளார். போலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!