Tamilnadu
“பக்கவாதம் ஏற்பட்டவருக்கு 2 மணிநேரத்தில் உரிய சிகிச்சை” : நிரந்தர ஊனம் ஏற்படாமல் மீட்ட அரசு மருத்துவமனை!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே நிரந்தர ஊனம் ஏற்படும் பக்கவாத நோயைக் குணப்படுத்தும் சிகிச்சையை அளித்து, பக்கவாத பாதிப்பில் இருந்து அரசு ஊழியரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு :
“சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு 02.10.2021 அன்று மாலை 4 மணி அளவில் 59 வயதுமிக்க அரசு ஊழியர் வந்தார். அவரது இடது கை, கால் 1 மணி நேரத்திற்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு செயல் இழந்திருந்தது.
அவருக்கு உடனடியாக தலைக்கு சி.டி ஸ்கேன் (CT Scan) எடுக்கப்பட்டு மூளையில் இரத்தக் குழாய் அடைப்பை நீக்குவதற்கான ஆர்-டி.பி.ஏ (R-TPA) என்ற விலை உயர்ந்த மருந்து இலவசமாக செலுத்தப்பட்டது. இந்த சிகிச்சை பக்கவாதம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் பலனாக இரத்த குழாய் அடைப்பு நீங்கி இடது கை, கால் பலம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பியது.
பக்கவாதம் ஏற்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் சி.டி ஸ்கேன் செய்து இம்மருந்தை செலுத்தினால் பலருக்கு நிரந்தர ஊனம் ஏற்படாமல் பெருமளவு குணமடைய வாய்ப்பு உள்ளது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் Dr.வள்ளி சத்தியமூர்த்தி MD.DA., மருத்துவமனை கண்காணிப்பாளர் Dr.தனபால், MS., நரம்பியல் துறைத் தலைவர் Dr.சிவக்குமார், MD.,DM., அவர்கள் விரைந்து செயல்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் Dr.செல்வராஜ், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் Dr.பால பிரதீப், Dr.லோகேஷ் ஆகியோரை பாராட்டினார்கள்.
இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் பெற சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இத்தகைய சிகிச்சையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பொது மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பலரும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் இத்தகைய நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!