Tamilnadu
“சிறுமியை திருமணம் செய்த இளைஞர் - அடைக்கலம் கொடுத்த நண்பர் போக்சோவில் கைது” : தேனியில் காவல்துறை அதிரடி!
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள T. மேட்டுப்பட்டி பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மாதம் 9ஆம் தேதி காணவில்லை எனக் கூறி அந்த சிறுமியின் தந்தை, தேவாரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இதனை அடுத்து தேவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன 17 வயது சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் சிறுமி தேவாரம் அருகே உள்ள ஒரு கிராமப் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 17 வயது சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தேவாரம் அருகே உள்ள சிறுமியின் ஊரான T.மேட்டுப்பட்டி பகுதியைச் சார்ந்த கூலித் தொழில் செய்து வரும் முருகன் (32) , என்பவர் சிறுமியை கூட்டி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முருகன் கூட்டிச் சென்று அவரது நண்பரது வீட்டில் ஒரு மாத காலமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தேவாரம் காவல்துறையினர் முருகனிடம் இருந்து சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அவரது நண்பரான கேசவன் என்பவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முருகன் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!