Tamilnadu

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடம் எடுத்த தி.மு.க MLA... குவியும் பாராட்டு!

தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தனது வயலுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவர்களை அழைத்துச் சென்று பயிர்கள் சாகுபடி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளைத் தனது நிலத்திற்கு அழைத்துச் சென்று நாட்டுக் காய்கறிகளின் சிறப்புகள் குறித்தும், மாடுகளின் முக்கியத்துவத்தையும் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ எடுத்துக் கூறினார்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்டு வரும் ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை, சிவப்பு நெல்லி, மிளகு போன்ற அரிய வகை செடி, மர வகைகள் குறித்தும் அந்தந்த இடங்களுக்கே சென்று அதன் செயல்முறைகள் குறித்தும் பண்புகள் குறித்தும் விளக்கினார்.

இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், "சட்டமன்ற உறுப்பினரே எங்களுடன் நிலத்திற்கு வந்து காய்கறிகள் குறித்தும், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிக் கூறியது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும் அவர் தனது நிலத்தில் இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகிறார். பல்கலைக்கழகத்தில் கிடைக்காத ஒரு அனுபவத்தை செயல்முறையாக நேரடியாக எங்களால் பெற முடிந்தது" எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “பவானிபூர் மக்கள் ஒவ்வொருவரின் சார்பாகவும்..” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி!