Tamilnadu

“கணவனை கொன்ற தாய்.. தாயின் தலையை துண்டாக வெட்டிய மகன்” : தூக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம் - என்ன காரணம்?

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள மறவம்பட்டியை சேர்ந்த தங்கராசு - திலகராணி தம்பதிகளின் மகன் ஆனந்த் (25).

இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு தந்தை தங்கராசுவை தாய் திலகராணி குடும்ப பிரச்சினையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து விடவே அதன்பின் மகன் தாயை விட்டு பிரிந்து தனியே வசித்துள்ளார். இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்து தாய் திலகராணி விடுதலையாகி அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தந்தையின் சொத்து தொடர்பான பிரச்சனையில் தாய் திலகராணி தனக்கு இடையூறு செய்ததாக கூறி, திலகராணியை ஆனந்த் பேருந்து நிறுத்தத்தில் வைத்து அரிவாளால் தலையை வெட்டி படுகொலை செய்து தலையுடன் காவல் நிலையத்தில் ஆனந்த் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மழையூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் ஆனந்த் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து குற்றவாளி ஆனந்திற்கு தாயை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி சத்திய தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளி ஆனந்த் பலத்த பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தற்போது வழங்கிய தூக்குத் தண்டனையும் சேர்த்து கடந்த எட்டு மாத காலத்தில் நான்கு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தககது.

Also Read: “வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!