Tamilnadu
“தி.மு.கவின் 4 மாத ஆட்சியைக் கண்டு பயந்து போய் இருக்கிறார்கள்” : அ.தி.மு.கவிற்கு கனிமொழி எம்.பி பதிலடி !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு தீத்தாம்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாடாளுமன்ற தி.மு.க குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டனர். தொடர்ந்து அந்த ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என கேட்டுள்ளீர்கள். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுபோல் தொடர்ந்து மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
மேலும் குழந்தைகளுக்கு திருமண செய்யகூடாது; படிக்க வைக்க வேண்டும். பெண்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி முறையாக வழங்க வேண்டும். மேலும் விவசாயம் பாதுகாக்கப்படவேண்டும் சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “எதையும் செய்யாதவர்கள் தி.மு.க ஆட்சி செய்வதை பார்த்து பயந்து போய் தான் தி.மு.க ஆட்சி ஏதும் செய்யவில்லை என தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் மற்றும் அ.தி.மு.கவினர் தி.மு.க ஆட்சி ஏதும் செய்யவில்லை என விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், பதவியேற்ற 100 நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள்தான் எதிர்க்கட்சிகள் மற்றும் அதிமுகவினரின் விமர்சனத்திற்கான பதில்” என தெரிவித்தார்.
முன்னதாக காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து கர்மவீரர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!