Tamilnadu
மீண்டும் உதயமாகும் ‘வருமுன் காப்போம்’ திட்டம்: கலைஞர் தொடங்கியதை செழுமைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2006ம் ஆண்டுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக தோல்வி மருத்துவத் துறையில் மிகப் பெரிய அளவில் எதிரொலித்தது. அதன்விளைவாக தமிழ்நாட்டில் உடல்நலப் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தொடங்கியது.
கிராமப்புறங்களில் வாழும் ஏழை - எளிய மக்களுக்கு நோய் பாதிப்பின் தீவிரத் தன்மை தெரியும் வரை, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்யதுக்கொள்ள முடியாத சூழலே அதிகம் இருந்தது. எளிய மக்களுக்கு நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் மற்றும் அவர்கள் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கபட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் தொடர்சியாக வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அப்போதைய ஆட்சியால் அதை ஒருபொருட்டாகக் கூட எண்ணவில்லை. இந்நிலையில், தி.மு.க தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்ததும், முதலமைச்சராக பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர், நோய் பாதிப்பை வேறில் இருந்தே ஒழிப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கையை மருத்துவத் துறையில் கொண்டு வந்தார்.
அதன் ஒருபகுதியாக செயல்படுத்தப்பட்ட திட்டமே “வரும்முன் காப்போம்” என்ற மகத்தான திட்டம். இந்த “வரும்முன் காப்போம்” திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அப்போதைய முத்தமிழறிஞர் கலைஞரால் பூவிருந்தவல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் கடந்த 2006 – 2011 ஆட்சிக் காலத்தில் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, சுமார் 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில், ஒரு கோடியே 72 லட்சத்து 5 ஆயிரம் ஏழை எளியோர் பயனடைந்தனர்.
தமிழகத்திலுள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புதியதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியமர்த்தி, 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளித்ததால், 2005-2006ல் நடைபெற்ற மகப்பேறுகள் 82,532 என்பது 2009-2010-ல் 2,98,853 ஆக, அதாவது மூன்று மடங்கு உயர்ந்தது.
குழந்தைகள் உயிர் காத்திடக்கூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாயும், சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாயும், கடினமான திறந்த அறுவை கிசிச்சைக்கு லட்ச ரூபாயும் என அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
இத்தைய திட்டத்தை கடந்த 2011-க்குப் பிறகு அ.தி.மு.க ஆட்சியாளர்களால் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆண்டுக்கு 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்' மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மருத்துவத்துறையில் மகத்தான திட்டமாக விளங்கிய வருமுன் காப்போம் திட்டத்தை சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16 சிறப்புத் துறை மருத்துவருடன் கூடிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆண்டுக்கு 1,240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் பல கோடி மக்கள் நோய் பாதிப்பின்றி, பாதுகாப்பான சூழலில் வாழும் நிலை உருவாகும் என மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?