Tamilnadu

மக்களே உஷார்.. குளிர்பானத்தால் தொடரும் பதற்றம் : குளிர்பானம் குடித்த 2 சிறுமிகளுக்கு உடல்நல பாதிப்பு !

கரூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபல தனியார் நிறுவன தயாரித்த குளிர்பானம் அருந்திய சிறுமி வாந்தி எடுத்ததால் பெற்றோர் அச்சம் டனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

கரூர் சின்ன ஆண்டான்கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவரது மகன் 13 வயது கணேஷ். மகள் 9 வயது தரணி. இவர்கள் இருவரும் நேற்று இரவு ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பிரபல நிறுவனத்தின் குளிர்பானங்களை அருந்தி உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சிறுமி தரணிக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அச்சமடைந்த இளங்கோ தனது மகன் கணேஷ் மற்றும் மகள் தரணியை தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு தரணியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

காலாவதியான குளிர்பானம் அருந்தியதால் சிறுமி வாந்தி எடுத்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன், சிறுமி அருந்திய குளிர்பானத்தை விற்பனை செய்த கடையில் உள்ள குளிர்பானங்களை ஆய்வு செய்தார்.

மேலும், சிறுமி அருந்திய பிரபல தனியார் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் கடந்த ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டது எனவும், தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து 9 மாதங்கள் பயன்படுத்தலாம் எனவும் குளிர்பான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 2 வேளை பிரியாணிக்கு 27 லட்சம் செலவா? நியூசி., வெளியேறியதை விட இதுதான் குடைச்சல் - புலம்பும் பாக்.,வாரியம்