Tamilnadu
“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி !
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்யானந்தம் - நந்தினி . இந்த தம்பதியினருக்கு இரண்டு குழம்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாக தனது ஒருவயதான மகனை அழைத்துக் கொண்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனது தாய் நாகலட்சுமி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.
தொடர்ந்து நந்தினி அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருவதால், குழந்தை துர்கேசை நந்தினியின் தாயார் நாகலட்சுமியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய நந்தினி, பேச்சு மூச்சு இல்லாமல் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த துர்கேஷைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தப்போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட, குழந்தையின் உடலை மீட்ட போலிஸார், பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் குழந்தையின் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்ததையடுத்து தாய் மற்றும் பாட்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை தான் கொன்றதாக பாட்டி நாகலட்சுமி ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக நாகலட்சுமி அளித்த விசாரணையில், குழந்தை துர்கேஷ் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வாயில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், நேற்றும் இதேபோல செய்ததால் கோபமடைந்த வீட்டில் இருந்த பிஸ்கட் கவரை எடுத்து குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டதும், சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி இருந்ததும் நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாகலட்சுமியை கைது செய்த போலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!