Tamilnadu

ஃபோர்ட் நிறுவனத்தால் தமிழக ஊழியர்களுக்கு பாதிப்பா? அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொல்லும் நற்செய்தி!

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட், இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு நேரடி உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் (T-1) உடன் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் அதனை மூட உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்நிலையில் அதற்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறினார்.

Also Read: “மோடி அரசின் ‘வாய்ச்சேவை’ தொழில்களைக் காப்பாற்றுமா?”: பா.ஜ.க வகையறாக்களை சாடிய கனகராஜ் - சிறப்பு கட்டுரை!

இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் தரப்பில் இருந்து வைத்துள்ளனர். எனவே அரசின் மூலமாக சில சலுகைகள் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளனர். அதனை முதல்வர் இடத்தில் கூறி, அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்போம் என்று தெரிவித்த அமைச்சர், 74 நிறுவனங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் ஃபோர்டு நிறுவனத்திற்கு சப்ளை செய்கின்றனர். சில நிறுவனங்கள் முழுவதுமாகவும், 90% நிறுவனங்கள் 30-40% ஃபோர்டு நிறுவனத்திற்கு சப்ளை செய்வதாக கூறியுள்ளனர் இதுதொடர்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றார்.

மேலும் ஃபோர்டு நிறுவனம் மூடப்படவில்லை, இயங்கி கொண்டுதான் இருக்கின்றது என்றும், அடுத்த ஆண்டு நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளதால், அதற்கு முன்பாக அங்கு வேலை செய்பவர்கள் யாரும் வேலை இழப்புக்கு ஆளாகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். போர்டு நிறுவனக் கட்டமைப்பை மற்ற நிறுவனம் எடுத்து நடத்துவது தொடர்பாக தொழில்துறை ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read: அதானி ஆர்பரில் இருந்த ஹெராயின்கள் தாலிபன்களுக்கு சப்ளை செய்ய இருந்ததா? பரபரப்பை கிளப்பும் தகவல்கள் இதோ!