Tamilnadu
நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி: ரஸ்க் ஆலை மீது அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்!
தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உணவு பண்டங்களில் அட்டூழியங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
சென்னை அம்பத்தூரில் கெட்டுப்போன உருளைக்கிழங்கில் புழு இருந்ததை அடுத்து பானிபூரி விற்று வந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று, காரைக்குடியில் ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்க்குகளை பேக் செய்த போது வட மாநில தொழிலாளர் ஒருவர் அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரஸ்க்குகள் மீது இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட்ட நபர் மீதும் தொடர்புடைய தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.
இந்நிலையில், காரைக்குடியில் உள்ள சுமார் பத்து ரஸ்க் பேக்டரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தயாரிக்கப்பட்ட ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பாக்கெட்டுகளில் நிரப்புவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனையடுத்து தரமற்ற, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 200 கிலோ ரஸ்குகளை குப்பையில் கொட்டிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து, விசாரணைக்கும் முடுக்கிவிட்டுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!