Tamilnadu
தஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊராக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி?
தேனி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. டிக்டாக் செயலி இருந்த சமயத்தில் வாடிக்கையாக வீடியோக்களை வெளியிட்டு வந்து பிரபலம் அடைந்த இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
இவரைப் போலவே டிக்டாக்கில் பிரபலம் அடைந்தவர்தான் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திவ்யா. டிக்டாக் செயலியை முடக்கிய பின்பு யூடியூப் சேனல் மூலம் திவ்யா வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இவர் பதிவிடும் வீடியோக்கள் பெரும்பாலும் ஆபாசமாகவே இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த திவ்யாவிற்கும் சுகந்திக்கும் டிக்டாக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு வரை சென்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகலாபுரத்தைச் சேர்ந்த சுகந்தி சமூக வளைதளத்தில் திவ்யா என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தினரைம் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக புகார் அளித்ததன் அடிப்படையில் பழனிச்செட்டிப்பட்டி காவல் துறையினர் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சுகந்தி கடந்த மாதம் 8ம் தேதி திவ்யா சமூக வளைதளத்தில் தன்னை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக தேனி சைபர் க்ரைம் போலிஸாரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு மீது விசாரணையை துவங்கிய சைபர் க்ரைம் போலிஸார் திவ்யாவை பிடிப்பதற்கு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனை அறிந்த திவ்யா தேனி போலிஸார் தன்னை தேடுவதை தனது யூடியுப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார் போலிஸார் தன்னை தீவரமாக தேடுவதால் ஊர் ஊராக சுற்றி வந்தார். சைபர் க்ரைம் போலிஸார் திவ்யாவின் தொலைபேசி எண்ணை ட்ராக் செய்து திவ்யா சென்ற தஞ்சாவூர், சென்னை, வடலூர் பான்டிச்சேரி, ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.
இறுதியாக நேற்று இரவு நாகப்பட்டினத்தில் சுற்றித் திரிந்த திவ்யாவை கைது செய்தனர், இன்று தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தகவல் தொழில் நுட்பச் சட்ட பிரிவு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து திவ்யாவை சிறையில் அடைந்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?