Tamilnadu
"1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவெறும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நேற்று பள்ளிகள் திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கையாக அளிக்க உள்ளோம்.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.30ம் தேதிவரை அமலில் உள்ளது. முதலமைச்சர் நடத்தவுள்ள கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அளிக்கும் அறிக்கையும் ஆய்வு செய்யப்படும். பின்னர் வகுப்புகளைத் திறப்பதாக வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!