Tamilnadu
தி.மு.க முப்பெரும் விழா : முத்தாய்ப்பு விருதுகள், பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கழக முப்பெரும் விழா இன்று (15.9.2021 - புதன்கிழமை) காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையேற்றிட கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிலையில், இவ்விழாவில் ஆசிரியர் ‘முரசொலி’ செல்வம் எழுதிய “முரசொலி சில நினைவலைகள்” என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பித்தார். விருதுகள் பெறுவோர் இம் “முப்பெரும் விழா”வில் முத்தாய்ப்பு விருதுகள் வழங்குவது தான். அதன்படி, கழகத் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; பெரியார் விருதை - மிசா பி.மதிவாணன் அவர்களுக்கும், அண்ணா விருதை - தேனி எல்.மூக்கையா அவர்களுக்கும், கலைஞர் விருதை - கும்முடிப்பூண்டி கி.வேணு அவர்களுக்கும், பாவேந்தர் விருதை - திருமதி.வாசுகி ரமணன் அவர்களுக்கும், பேராசிரியர் விருதை - பா.மு.முபாரக் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பித்தார்.
முப்பெரும் விழா” விருது - பரிசுகளை கழகத் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கழகத்துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, டாக்டர். க.பொன்முடி, திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.இராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!