Tamilnadu

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும்”: ஒன்றிய அரசுக்கு அடுத்த அடி - திமுக வழக்கில் ஐகோர்ட் அதிரடி!

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய திமுக தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு அரசு 8 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர்.எழிலன் நடத்திவரும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறலாகும். இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது.

மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976 மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் ஒன்றிய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த மனு குறித்து ஒன்றிய அரசு எட்டு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 10 வார காலத்திற்கு தள்ளி வைத்து வைத்து உத்தரவிட்டனர்

Also Read: “இடஒதுக்கீட்டில் சீட் கிடைத்துவிடும் என்று ஆறுதல் கூறியும் இப்படி பண்ணிட்டா” : மாணவியின் தந்தை உருக்கம்!