Tamilnadu
“இடஒதுக்கீட்டில் சீட் கிடைத்துவிடும் என்று ஆறுதல் கூறியும் இப்படி பண்ணிட்டா” : மாணவியின் தந்தை உருக்கம்!
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.
மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த 4 வருடங்களில் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த ர் மாணவர் தனுஷ் , நீட் தேர்விற்கு பயந்த 12ம் தேதி அதிகாலை வீட்டின் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் சட்டமன்றத்தில் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்தும் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞர் பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலெட்சுமி இவரும் வழக்கறிஞருக்கு படித்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது முதல் மகள் கயல்விழிம் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் கனிமொழி 17.
இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 எடுத்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். பின்னர் நாமக்கல் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண்களுடன் 93 சதவீதம் எடுத்த நிலையில், தற்போது கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி மன அழுத்தம் காரணமாக இருந்துள்ளார்.மாலையில் அரியலூர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ள தனது மனைவியை அழைத்துவர கருணாநிதி சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் வீட்டை திறக்கும்பொழுது கதவு திறக்கப்படவில்லை, இதனால் உறங்கி விட்டாரோ என்று நினைத்து மீண்டும் மீண்டும் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார் கனிமொழி. இதை கண்டு அதிர்ச்சி பெற்றோர் அடைந்துள்ளனர்.
நீட் தேர்வினால் நீட் தேர்வால் தொடர் தற்கொலைகள் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அனிதா, எலந்தங்குழி மாணவன் விக்னேஷ் தற்பொழுது மாணவி கனிமொழி என ஜெயங்கொண்டத்தில் நீட்தேர்வு காரணமாக இறந்த மூன்றாவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவி சந்தைக் கூறுகையில், “தேர்வு கடினமாக இருந்தது. சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றார். பரவாயில்லை, தமிழக முதல்வர் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியுள்ள பத்தரை சதவீத இட ஒதுக்கீட்டில் எப்படியாவது மருத்துவம் கிடைத்துவிடும் என ஆறுதல் கூறியும் உயிரை மாய்த்துக் கொண்டார். நீட் உயிர்க்கொல்லியால் தான் எனது மகள் தற்கொலை செய்துகொண்டார்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!