Tamilnadu

"700 கைதிகள் விடுதலை... விரைவில் காவல்துறை ஆணையம்": பேரவையில் முதலமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றோடு சட்டப்பேரவை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் காவல்துறை மானிய கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வருமாறு:-

தி.மு.க ஆட்சியில் வன்முறைகள் இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை! மத மோதல்கள் எழவில்லை! துப்பாக்கிச் சூடுகள் இல்லை! அராஜகங்கள் இல்லை!

விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா மரண வழக்கின் விசாரணையும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை. இற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

சாதி,மதம், கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்சோ வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: ”நீட் தேர்வை எதிர்க்க தெம்பும் திராணியும் அற்றது அதிமுக” - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்!