Tamilnadu

“இரவில் ஃபோன் செய்கிறார்.. சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை?” : பாஜக நிர்வாகி மீது குவியும் புகார்!

பா.ஜ.கவினர் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருவது புதிதல்ல. குறிப்பாக, பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

அதுமட்டுமல்லாது பெண்கள் விஷயத்தில் நாடுமுழுவதுமே பா.ஜ.கவினர் ஒரேமாதிரியாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக பா.ஜ.கவில் உள்ள பெண்களே தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் புகார்களில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களும் விதிவிலக்கல்ல என்பது போல சமீபத்தில் பா.ஜ.கவின் மாநிலச் செயலாளர் மீது பாலியல் புகார் ஒன்று பூதாகரமானது. இதனால் இணையத்தில் பலரும் பா.ஜ.க தலைவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் இதற்கு முன்பு பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க தலைவர்களின் விவகாரங்களையும் பகிர்ந்து தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தற்போது பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகார் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் வானூர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் அக்கட்சி மாவட்ட தலைவர் மீது புகார் மனு அளித்தாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த புகார் மனுவில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் மாவட்டத் தலைவர் முழுமையாக அபகரித்துக்கொண்டார். மேலும் கிளை அளவில் ஒதுக்கப்படும் நிதியை கூட முழுமையாக கையாடல் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, வானூர் ஒன்றியத்தில் உள்ள மகளிர் நிர்வாகிகளிடம் இரவு நேரங்களில் ஃபோன் செய்து வருவதால்அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் புதிதாக மகளிர் உறுப்பினர்கள் சேருவதில்லை. ஒன்றிய நிர்வாகிகளையும் பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்.

அதேபோல், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திலும் கட்சி பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருகிறார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் அவரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த புகார் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெளியானது பா.ஜ.க தலைவர்களின் மீதான பாலியல் புகார் பட்டியல் : வளர்ப்பு மகளையும் விட்டுவைக்காத மிருகங்கள் ?