Tamilnadu

நெடுஞ்சாலைகளில் மஞ்சள் நிற பெட்டி இருப்பது ஏன்? - ‘SOS' செயல்பாடு பற்றி உங்களுக்கு தெரியுமா?

நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற SOS பாக்ஸ்களின் பயன்பாடு குறித்து வாகன ஓட்டிகள் பலருக்கும் தெரிவதில்லை. இது அவசர காலங்களில் மிகவும் உதவிகரமானது.

SOS (Save Our Soul) என்பது அவசர உதவி கோரல் குறியீடாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கும் ஓரிடத்தில் சாலையின் இருபுறமும் SOS பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலையில் விபத்து உள்ளிட்ட அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்.

இந்த SOS பாக்ஸ் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பாக அந்தப் பகுதியைப் பராமரிக்கும் சுங்கச்சாடியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருப்போரிடம் உதவி கோரலாம். இந்த SOS பெட்டிகள் தொடர்ந்து இயங்கும் வகையில் சூரிய மின் இணைப்பு செய்யப்பட்டிருக்கும்.

SOS பாக்ஸில் உள்ள பொத்தானை லாங் பிரஸ் செய்வதன் மூலம் அவசர கால தொலைபேசிய சேவையை இயக்கலாம். அதற்கு கீழே இருக்கும் பகுதியில் மைக் அமைக்கப்பட்டிருக்கும். அதன் வாயிலாக நீங்கள் பேசலாம்.

SOS பாக்ஸின் மேற்பகுதியில் ஸ்பீக்கர் அமைக்கப்பட்டிருக்கும். அதன் வழியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் பேசுவதை நீங்கள் கேட்கலாம்.

விபத்து, வாகன கோளாறு உள்ளிட்ட எந்தவொரு அவசர தேவைக்கும் நீங்கள் இதன் மூலம் உதவி கோரலாம். வாகன ஓட்டிகள் அவசர தேவை ஏற்படும் சூழல்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Also Read: “Light மாற்றுவதற்கு 28 லட்சம் ரூபாய் சம்பளம்.. வருடத்திற்கு 2 நாள்தான் வேலை” : அது என்ன வேலை தெரியுமா?