Tamilnadu
விடுமுறைக்கு சென்ற இடத்தில் விபரீதம்.. ஆனந்தமாய் விளையாடிய இரண்டு குழந்தைகள் பலி - இன்று தந்தை தற்கொலை!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடம்பூர் கைலாசகிரி பகுதியில், வசித்து வருபவர் லோகேஸ்வரன். அவரது மனைவி மீனாட்சி மலைப்பகுதியில், உள்ள முருகன் கோவிலுக்கு நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை நாள் என்பதால் தனது இரு குழந்தைகளை அழைத்துகொண்டு மலைப்பகுதிக்கு சென்ற லோகேஸ்வரன் அங்குள்ள பாறையின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவரது மகன் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 8 வயது சிறுவன் ஜஸ்வந்த் மற்றும் அவரது சகோதரி ஹரி பிரீத்தா 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோர், அங்கு உள்ள குளத்தில் மீன் பிடித்துகொண்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென ஹரி பிரீத்தா நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற அவரது அண்ணன் ஜஸ்வந்த் முயற்சித்துள்ளார்.
இருவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். இதை அறிந்த அவரது தந்தை லோகேஸ்வரன் குளத்தில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல் 2 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். உடனடியாக உமராபாத் காவல் துறையினருக்கும் மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவரையும் மீட்டனர்.
பின்னர் மலைப்பகுதியில் இருந்து சடலத்தை எடுத்து வருவதற்கு யாரும் இல்லாததால் காவல் உதவி ஆய்வாளர் காந்தி ஹரி பிரீத்தாவின் உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தோள் மீது சுமந்து வந்து ஆம்புலன்சில் வைத்தார். மற்றொரு சடலத்தை காவலர்களும் அங்குள்ள சிலர் அங்குள்ள சிலர் டோலி கட்டி தூக்கி வந்தனர். பின்னர் 2 சடலத்தையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தனது தந்தையுடன் செல்பி எடுத்து கொண்டும் புகைப்படங்கள் எடுத்து கொண்டு ஆனந்தமாய் விளையாடிய 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், சோகத்தில் இருந்த லோகேஸ்வரன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!