Tamilnadu

“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செஞ்சா பணம் குவியும்” ரூ.2 கோடி மோசடி செய்த கும்பல்-போலிஸில் சிக்கியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், ஆலங்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனக்குத் தெரிந்தவர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் தனக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் பல இடங்களில் நிலம் வாங்கி வருகிறோம். இதில் நீங்கள் ஒரு லட்சம் ஒருவாய் வரை முதலீடு செய்தால் மாதாமாதம் 18 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இவரது பேச்சை நம்பி 25க்கும் மேற்பட்டோர் இவரிடம் 2 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளனர். இந்த பணத்தை கவுசல்யா, கவியரசன் என்பவர்களின் வங்கிக் கணக்கில் 60 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். மீதி பணத்தை கவுசல்யாவிடம் பிரகாஷ் கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட சக்திவேல், கவுசல்யா, கவியரசன் ஆகிய மூன்று பேர் பிரகாஷ் உள்ளிட்ட 26 பேருக்கு மாதாமாதம் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதற்கு அந்த கும்பல் பணம் கேட்டால் கொலை செய்துவிடுவேன் என பிரகாஷ் உள்ளிட்ட அனைவரையும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து சக்திவேல், கவுசல்யா, ராமசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கவியரசனை போலிஸார் தேடிவருகின்றனர். பிரகாஷிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சாலையில் வலியோடு நடந்துச் சென்ற சிறுவன்.. பெற்ற மகனுக்குச் சூடுவைத்த கொடூரத் தாய் : அதிர்ச்சி தகவல்!