Tamilnadu

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: சிறையில் உள்ள வாளையார் மனோஜிடம் விசாரணை - அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்?

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு வாகனம் வழங்கிய மற்றும் வாகனத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கொடநாடு கொள்ளை வழக்கு விசாரணையானது தொடர்ந்து உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வாகனங்களை வழங்கிய உரிமையாளர் நவ்ஷத், இடைதரகர் நஃபுல் ஆகிய இருவரும் இன்று ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி சுரேஷ் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று தனிப்படை போலிஸார் விசாரணை நடத்துவதற்காக கேரளா சென்றுள்ள நிலையில், முன்னால் ஜெயலலிதா கார் ஓட்டுனரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் கொள்ளையடித்து சென்ற ஆவணங்களை யாரிடம் வழங்கினார் என்பது குறித்த விசாரணை நடத்துவதற்காக, மற்றொரு தனிப்படை போலிஸார் சேலம் மாவட்டம் ஆத்தூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனுடைய குன்னூர் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்படும், வாளையார் மனோஜிடம் விசாரணை நடத்துவதற்காக அனுமதி கேட்டு சிறைத் துறை அதிகாரிகளுக்கு தனிப்படை போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ”இதுவரை வெறும் சரவெடி; இனிமேல்தான் அதிர்வேட்டு” - கொடநாடு வழக்கின் திகுதிகு திருப்பங்கள்: ஷாக் ரிப்போர்ட்