Tamilnadu
“ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? - உண்மை என்ன?”: பா.ஜ.க - சீமான் வகையறாக்களுக்கு திராவிடர் கழகம் பதிலடி!
திருச்சியில் பெரியார் சிலை மட்டும் ரூ.100 கோடியில் அமைக்கப்படுவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என திராவிடர் கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் திருச்சி அருகே அமைக்கப்படும் பெரியார் உலகத்தில். பெரியார் சிலை 95 அடி உயரத்தில் அடியில் அமைக்கப்படுவதாக திராவிடர் கழகத்தின் விடுதலை நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் அருகே பெரியார் உலகம் அமைக்கப்பட்டும் என அறிவித்தனர். இதுதொடர்பாக கடந்த 30ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், "பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் 'பெரியார் உலகம்' என்ற தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று மாலை முதலமைச்சர் அவர்களின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நன்றி தெரிவித்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெரியாருக்கு 95 அடி உயர சிலையை அரசு அமைக்கப்போவதாக பா.ஜ.க - நாம் தமிழர் கும்பல் பொய் செய்திகளை பரப்பினர். குறிப்பாக, நூறு கோடி ரூபாயில் பெரியார் சிலையா? இந்தக் கொரோனா காலத்தில் இது தேவையா? என்று தன் மனப்போக்கில் தவறான தகவல்களை சில ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்ப ஆரம்பித்துவிட்டன. சமூக வலைதளங்களிலும் தம் விருப்பத்துக்கு ஏற்ப எதை எதையோ எழுதித் தங்கள் வயிற்று எரிச்சலைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் திராவிடர் கழகத்தின் விடுதலை நாளேட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உண்மை என்ன ? பெரியார் உலகம் என்பது பெரியார் சிலை மட்டுமல்ல. 27 ஏக்கர் பரப்பில் 40 அடி பீடம், 95 அடி உயரபெரியார் சிலை, தந்தை பெரியார் ஒலி, ஒளிகாட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய பூங்கா, சுவையான உணவகம், வாகன நிறுத்தத்துக்கு வசதிகளுடன் ஒப்பரிய அம்சங்கள் பூத்துக் குலுங்குவதுதான் பெரியார் உலகம்.
உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாகிறது என்று உண்மைக்கு மாறாகப் பிரச்சாரம் செய்வதை - கழகத் தோழர்கள், பற்றாளர்கள் சமூகவலை தளங்களில் வெளிப்படுத்துவீர்!” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!