Tamilnadu
கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க நீதிபதிக்கு நெருக்கடி தந்த CV.சண்முகம்?: கூண்டோடு சிக்கிய அதிமுக கும்பல்!
கொடநாடுகொலை கொள்ளை சம்பவ வழக்கை அவசர அவசரமாக முடிக்க அப்போதைய அ.தி.மு.க அரசு தீவிரம் காட்டியது. ஆனால், பல்வேறு காரணங்களால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இவ்வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என போலிஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை பரிசீலித்த நீதிபதி வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி தற்போது மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மேற்பார்வையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் புலன் விசாரணை 5 குழுக்கள் அமைக்கப்பட்டு மிகத் தீவிரமாக, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக நடைபெறும் விசாரணையில், கொடநாடு கொலை கொள்ளை குறித்த பல்வேறு ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும், இருப்பினும் தனிப்படை போலிஸார் அழிந்துவரும் ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப ரீதியாகவும், மொபைல் போன் அழைப்புகள், சிக்னல்கள் குறித்து, தனிப்படை போலிஸார் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிறந்தோர் பலவேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தபோது கொடநாடு எஸ்டேட்டில் ஒருமுறை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அப்போது எஸ்டேட் ஊழியர்கள் பார்த்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடியதும் இதுகுறித்து சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் வழக்கு பதிவு செய்யாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸாரை விலகியது ஏன் என்றும் பிறந்தோர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொலை கொள்ளை சம்பவத்தில் பெரிய பெரிய ரகசியங்கள் மூடிமறைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொடநாடு வழக்கை கடந்த பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அப்போதைய அ.தி.மு.க சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்த வடமலைக்கு நெருக்கடி தந்ததாக தனிப்படை போலிஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொந்தமான கொடநாடு ஆடம்பர பங்களாவில், தனிப்படை போலீசார் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று கொடநாடு எஸ்டேட் அலுவலகம், நுழைவாயில் பகுதியில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று முதன்முறையாக ஆடம்பர பங்களாவுக்கு காவல்துறையினர் விசாரணை நடத்த செல்வது குறிப்பிடத்தக்கது .
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!