Tamilnadu

விநாயகர் ஊர்வலத்துக்காக பேசுறீங்க; கேஸ் விலைக்கு பேசமாட்டிங்களா?- பாஜகவை Left Right வாங்கிய மாதர் சங்கம்!

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகுகளை பெண்கள் தலையில் சுமந்து ஒன்றிய அரக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வலன்டீனா, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்துள்ள சூழலில் பெட்ரோல் உள்ளிட்ட சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணம் என்ன என கேள்வியெழுப்பினார்.

மேலும் மோடி அரசின் நடவடிக்கையால் மீண்டும் விறகுகளைப் பயன்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளோம். விநாயகர் சதூர்த்தியை கட்டாயம் நடத்த வேண்டும் என கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேச தயாராக இல்லை.

ஒரு புறம் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்று வரும் சுழலில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் அனைத்து பொருட்களும் விலை உயரும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.

Also Read: “தடை விதிக்க சொன்னதே ஒன்றிய அரசு தான்”: பாஜகவின் விநாயகர் சதுர்த்தி அரசியலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!