Tamilnadu
இப்போதுதான் கொரோனா குறைந்து வருகிறது; இந்த நேரத்தில்.. மாணவர்களுக்கு போலிஸ் கமிஷ்னர் முக்கிய அறிவுரை!
சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாள் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ மாணவிகளுக்கு டேப்லட் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 150 சிறார்கள் மன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 50 சிறார் மன்றம் தொடங்கப்படும். இந்த மன்றத்தில் உள்ள சிறார், சிறுமிகளுக்கு விளையாட்டு பயிற்சி, மற்றும் HCL பவுண்டேஷன் உதவியுடன் கணினி பயிற்சி வழங்கி வருகிறோம்.
பல நாட்களுக்குள் பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது "பஸ் டே" பெயரில் மாணவர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. கோவிட் தொற்றிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகிறோம். எனவே, பேருந்து கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம்.
பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் அருகே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். குட்கா வழக்குகளில் கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்ள உள்ளோம். இதுவரை தமிழகத்திற்கு குட்கா கடத்தி வந்த 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் உள்ள குட்கா ஏஜென்ட்களை கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இருந்தால் கண்டிப்பாக கைது செய்வோம்.
குற்றங்கள் தடுக்க படுவதில் சிசிடிவி கேமராக்கள் பெரும் பங்கு வகிக்கிறது. சில தனியார் அமைப்புகள் உதவியோடு சென்னையில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கேமராக்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன. சில கேமராக்கள் பழுதடைந்து உள்ளது. அவற்றை சரி செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
சிசிடிவி கேமரா அதிகப்படுத்த அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். 10 ஆயிரத்துக்கும் அதிகமான கேமரா வர உள்ளது. அதுவந்தபிறகு கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அண்ணாநகர் சந்திப்பில் பொருத்தப்பட ANPR கேமராக்கள் போன்று சென்னையில் 165 இடங்களில் வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்