Tamilnadu

6-வது முறையாக கிடைத்த வைரங்கள்.. விவசாயி தோட்டத்தில் தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல்!

மத்தியபிரதேச விவசாயி ஒருவர் 6-வது முறையாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்தார்.மத்தியபிரதேச விவசாயி ஒருவர் 6-வது முறையாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்தார்.மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் சிறு சிறு நிலங்களை உள்ளூர் விவசாயிகளுக்கு அம்மாநில அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் வைரம் இருப்பதாக கண்டுக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு கிடப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் வைரம் கிடைத்தால் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் அதனை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையில் அரசுக்கு சேரவேண்டிய கட்டணம், வரி போக மீதத் தொகையை வைரத்தை எடுத்த நபரிடம் கொடுப்பார்.

இப்படி ஜாருபூர் கிராமத்தில் அரசிடம் குத்தகைக்குப் பெற்ற வைர குவாரியில் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தார், பிரகாஷ் மஜும்தார் என்ற விவசாயி. அவர், 6.47 கேரட் மதிப்புள்ள உயர்தரமான வைரக்கல்லை தோண்டி எடுத்திருக்கிறார். இவர், கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே 5 முறை இதுபோல வைரம் அகழ்ந்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விவசாயி பிரகாஷ் கண்டுபிடித்துள்ள வைரம் ஏலம் விடப்பட்டு, அந்த தொகை அவருக்கு வழங்கப்படும். அந்தவகையில் பிரகாசுக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read: “தோல்வி விரக்தியில் பழிவாங்கும் துடிக்கும் ஒன்றிய அரசு?” : விசாரணை அமைப்புகளை ஏவுவதாக மம்தா குற்றச்சாட்டு