Tamilnadu
“தன் உயிரை கொடுத்து பசு மாட்டை காப்பாற்றிய சிறுவன்” : ரயில் விபத்தில் நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலீப்குமார். இச்சிறுவன் கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்ந்து வந்தான்.
இந்நிலையில், தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் சிறுவன் திலீப்குமார் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு ஒன்று திடீரென ரயில்வே தண்டவாளம் பகுதிக்குச் சென்றது. அந்நேரம் பார்த்து, மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி ரயில் சென்றது.
ரயில் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன், மாட்டை விரட்டுவதற்காக ரயில் தண்டவாளத்துக்கு ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாகச் சிறுவன் திலீப்குமார் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
ஆனால், மாடு ரயில் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அங்கு வந்து சிறுவன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டைக் காப்பாற்றும் போது ரயிலில் அடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!