Tamilnadu

மக்களே உஷார்.. கலெக்டர் போல் செல்போனில் பேசி பண மோசடி செய்ய முயற்சி - சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தி.மு.க மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட் மற்றும் திருமண மண்டப உரிமையாளராக உள்ளார். அவரது செல்போனிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் என்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் என்றும் பேசி 28ஆம் தேதி திருமண மண்டபம் வாடகைக்கு வியாபார சங்க கூட்டம் நடைபெறுவதற்காக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் ஒரு உதவி செய்யவேண்டும் என்று கேட்டு தனியார் வங்கி எண் ஒன்றை அனுப்பி அவசரமாக இந்த வங்கி கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். கூட்டம் முடிந்தவுடன் வாடகை பணத்துடன் இந்த பணத்தையும் கொடுத்து விடுவதாக மர்ம நபர் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ரீதர், உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், வங்கி கணக்கு, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்து இந்த எண்ணில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் போல் பேசி பணத்தை மோசடி செய்ய முயற்சி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் மற்றும் தனிப்படை காவல்துறையினர் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் பேரை பயன்படுத்தி பணம் மோசடி செய்த முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Also Read: பெண் போலிஸைக் கொலை செய்த கணவர்.. விருதுநகரில் நடந்த பயங்கரம் - வெளியான அதிர்ச்சி தகவல்!