Tamilnadu
“சென்னையை தொடர்ந்து பெரம்பலூரில் கட்டப்பட்ட தரமற்ற குடியிருப்பு” : மக்களின் உயிரில் விளையாடிய ‘OPS’ !
கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது, பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாளையம் கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 504 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டன. ரூ.42 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தற்போது 150க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
மேலும் இங்கு கட்டப்பட்ட வீடுகளில் பயணாளிகள் தேர்வு செய்ப்பட்டும் குடியிருக்க அவர்கள் வருவதற்குள் பல்வேறு வீடுகள் விரிசல் ஏற்பட்டு, சிமன்ட் பூச்சி கலவைகள் உதிர்ந்து கொட்டி சேதம் அடைந்துள்ளது. படிகளும் உடைத்துள்ளன. இதனால் குடியிருக்கும் மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்து உள்ளது.
மேலும் ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என்று பணம் கட்டிய நிலையில், இதுபோன்ற தரமற்ற வீடு கட்டி கொடுக்கப்பட்டிருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவையான தண்ணீர், மின்சார வசதி ஆகியவை முறையாக வழங்கப்படாமல் குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பு கட்டடங்கள் அங்குள்ள கல் குவாரி அருகே கட்டப்பட்டுள்ளது. இதனால் கல்குவாரி மூலம் ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அப்போதைய அ.தி.மு.க ஆட்சியின் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தபோது திறந்து வைக்கப்பட்ட இக்கட்டிடத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, குடிபுகுந்து ஆறு மாதத்திற்குள் கட்டிடம் பழுதடைந்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்புவாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து முறையாக கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் இல்லையென்றால் பணத்தை திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!