Tamilnadu
“Crowd Funding மூலம் கோடிக்கணக்கில் மோசடி?” : ‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர் விளக்கம்!
யூ-டியூப் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் ‘பரிதாபங்கள்’ சேனலை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
கோபி - சுதாகர், கடந்த 2018ஆம் ஆண்டு பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும், அதன் சார்பில் ஒரு படம் எடுக்க உள்ளதாகவும் அதற்காக ‘க்ரவுட் ஃபண்டிங்’ முறையில் பணம் திரட்ட உள்ளதாகவும் அறிவித்து வீடியோ வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் அவர்களுக்கு பணம் அனுப்பினர். இந்நிலையில் சமீபத்தில் ‘பரிதாபங்கள்’ சேனலில் சூப்பர் பேக்கர்ஸ் என்ற செயலியை விளம்பரப்படுத்தி அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கோபி - சுதாகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ‘ஃபண்ட் மெலன்’ என்ற மோசடி செயலி மூலம் கிரவுட் ஃபண்டிங்கில் ஈடுபட்டதாகவும், இந்தியாவிலேயே கிரவுட் பண்ட் மூலம் இவர்களுக்குதான் அதிக நிதி கிடைத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கோபி - சுதாகர் இருவரும் விளக்கமளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோவில், “சூப்பர் பேக்கர்ஸ் செயலி நிர்வாகத்தினர் எங்களிடம் விளம்பரம் கொடுக்க வந்தனர். மற்ற சேனல்களில் எப்படி விளம்பரம் செய்வார்களோ அப்படித்தான் நாங்களும் விளம்பரம் செய்திருந்தோம். அவ்வளவு தான் எங்களுக்கும் அவர்களுக்குமான தொடர்பு. மற்றபடி அவர்களது தொழிலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
எங்களது படம் தொடங்கும்போதே சில கேள்விகள் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது குற்றச்சாட்டாக மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படம் தொடங்கியது முதலே வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் முழு மூச்சாக இந்தப் படத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
பணம் வாங்கிவிட்டோம் என்பதற்காக ஏனோதானோவென்று ஒரு படத்தை கொடுத்துவிடக் கூடாது என்று நினைக்கிறோம். ஏன் இவ்வளவு காலம் என்பது படத்தின் டீசர் வரும்போது உங்களுக்கு புரியும். விரைவில் டீசர் வெளிவரும்.” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?