Tamilnadu
“இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்” : அ.தி.மு.கவினருக்கு நிதி அமைச்சர் பதிலடி!
தி.மு.க அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது, அ.தி.மு.க உறுப்பினர் ராஜன் செல்லப்பா, "பெட்ரோல் விலையைக் குறைத்த தி.மு.க அரசு, டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "அ.தி.மு.க ஆட்சியில் மூன்று முறை பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய தி.மு.க ஆட்சியில் 4 முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க அரசு பெட்ரோல் மீதான வரியைக் குறைத்ததால், பெட்ரோல் பயன்படுத்தும் 2 கோடி பேர் நேரடியாகப் பயன் பெறுகின்றனர். பத்து லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான வாகனங்கள் டீசலை பயன்படுத்தி வருகின்றன. டீசல் விலையைக் குறைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் டீசல் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்துத் துறைக்கு மானியம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருக்கிறோம். சமூக நீதி, பொருளாதார நீதியை நிலைநாட்டத் தமிழ்நாடு அரசு தினந்தோறும் பணியாற்றி வருகிறது" எனத் தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?