Tamilnadu
கோடநாடு வழக்கு: EPSன் தூண்டுதலால்தான் கொள்ளையே நடந்தது? பரபரப்பு வாக்குமூலம் அளித்த சயான்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையை சார்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன், உதயக்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. அதில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
தற்போது நிபந்தனை ஜாமினில் உதகையில் சயான் தங்கி வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் கடந்த 13 வழக்கு விசாரணையின் போது கோத்தகிரி காவல்துறையினர் இந்த வழக்கில் சயான் உள்ளிட்ட 10 பேரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மாவட்ட நீதிபதி சஞ்ஜய் பாபாவிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி போலிஸார் சம்மன் வழங்கினர். அதனை பெற்று கொண்ட சயான் இன்று மாலை 3.20 மணிக்கு உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி முடித்தனர்.
விசாரணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும் எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் தன்னிடம் கூறியபடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரியும் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளருமான சஜீவன் உத்தரவின்பேரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சாயன் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ் கோடநாடு பங்களாவில் உள்ள முக்கிய ஆவணங்களை எடுத்து வருமாறு சயானிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 3.24 துவங்கிய விசாரணை 6.35 மணி அளிவில் நிறைவடைந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!