Tamilnadu

கோரிக்கையை நிராகரித்த அ.தி.மு.க...அமைச்சரான பிறகு அசத்தலாக செய்துகாட்டிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

தி.மு.க அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது, ராஜன் செல்லப்பா சட்டப்பேரவையில் காகிதமில்லா இ பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினி வைக்கப்பட்டிருந்தது, பட்ஜெட்டை எளிமையாகத் தெரிந்து கொள்ள உதவியது.

மேலும் உறுப்பினர்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இ பட்ஜெட்டை வரவேற்கும் வேளையில் புத்தகங்களும் அச்சிடப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இவரின் கேள்விக்குப் பதில் அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "அரசு சார்பில் வழங்கப்படும் நூல்கள் 70% வரை உறுப்பினர்கள் எடுத்து செல்வதில்லை. இதனால் புத்தகங்கள் வீணாக பழைய பேப்பர் கடைக்கு செல்வதும் தெரியவந்தது.

2016ம் ஆண்டே காகிதமில்லா இ பட்ஜெட் உருவாக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அப்போதைய அதிமுக அரசு ஏற்கவில்லை. தற்போது காகிதமில்லா இ பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 400 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு கருவூலம், நூலகம், கணக்காளர், அலுவலகம் ஆகிய முக்கியமான இடங்களுக்கு மட்டும் வழங்கப்படும்" என தெரிவித்தார்.

Also Read: ”100 நாளில் சீரான, நிலையான வளர்ச்சி.. சதத்தைத் தொட்ட திமுக அரசின் சாதனைகள்” - தினமணி நாளேடு புகழாரம்!