Tamilnadu
”ஸ்டாலின் என்பது தனிப்பட்ட பெயரல்ல, வரலாற்றின் தொடர்ச்சி!” - TOI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
"தி டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டிற்கு தமது ஆட்சியின் 100 நாள்கள் நிறைவு சாதனைகளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அதன் முதல் பாகம் பின் வருமாறு:-
செய்தியாளர்: It has been almost a 50-year political journey to the CM's chair. How did you feel when you took oath and said, ‘I, Muthuvel Karunanidhi Stalin...’?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று நான் சொன்னது 150 ஆண்டு கால வரலாற்றைச் சொல்லும். உலகப் பந்தில் எளிதில் அடையாளம் காண முடியாத திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து - இந்த தமிழ்நாடே எந்நாளும் கொண்டாடும் ஒரு மாபெரும் தலைவரைத் தந்தவர் முத்துவேலர். நினைத்ததும் பாடல் எழுதும் கவிஞராக இருந்த அவருக்குப் பிறந்த பிள்ளைதான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து தனக்காக இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான தலைவராக உயர்ந்து நின்றார் முத்தமிழறிஞர் கலைஞர். இந்த மாபெரும் வரலாற்றின் தொடர்ச்சிதான் நான்.
ஸ்டாலின் என்பது தனிப்பட்ட பெயரல்ல, வரலாற்றின் தொடர்ச்சி!
ஸ்டாலின் என்பது தனிப்பட்ட பெயரல்ல, இந்த வரலாற்றின் தொடர்ச்சி என்பதைத்தான் நான் சொன்னேன். அதை உரக்கச் சொல்லும் வகையில் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று சொல்லி உறுதிமொழி ஏற்றது எனக்கே பெருமிதமான உணர்வைத் தந்தது. அந்த மூன்று பெயர்களை உச்சரிக்கும் போது நான் மட்டுமல்ல, கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகள் அத்தனை பேரும் எழுந்து நின்று உறுதி மொழி எடுத்துக் கொள்வதைப் போன்ற உற்சாகத்தை அடைந்தார்கள். அத்தகைய மகிழ்ச்சியை உடன்பிறப்புகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததையே எனது சாதனையாக நினைக்கிறேன். "நீண்ட தூரம் ஓடினால்தான் அதிகமான உயரத்தைத் தாண்ட முடியும்" என்று கலைஞர் சொன்னதை சற்று எண்ணிப் பாருங்கள்!
ஒவ்வொரு துறை வாரியாகவும் பல்வேறு திட்டங்கள்!
செய்தியாளர்: As you complete 100 days, how many promises have you ful-filled? How many more to go?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் கொரோனா இரண்டாம் அலையின் பெரும் தாக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். அது குறித்து தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி 4000 ரூபாயை இரண்டு தவணையாக வழங்கியிருக்கிறோம். தேர்தலில் வாக்குறுதி அளிக்காமலேயே, ஊரடங்கு கால மக்கள் வாழ்க்கையை கவனத்திலும் கணக்கிலும் கொண்டு அத்தியாவசியமான 13 பொருட்கள் அடங்கிய தரமான மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மக்கள் தந்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை வாரியாகவும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலை மறைப்பதற்காக போடும் வெற்றுக் கூப்பாடு!
செய்தியாளர்: What about the opposition charge that you have not delivered on several promises?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அ.தி.மு.க.வினர் தங்கள் ஆட்சிக் கால ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை மக்கள் கவனத்திலிருந்து மறைப்பதற்காக போடும் வெற்றுக்கூப்பாடு இது. மக்கள் எங்கள் ஆட்சியின் சாதனைகளை கவனிக்கிறார்கள், உணர்கிறார்கள், பாராட்டுகிறார்கள். ஊழல் செய்த அ.தி.மு.க.வினரை சட்டம் நன்றாகவே கவனித்துக் கொள்ளும்.
போர்க்கால வேகத்தில் தொற்றுப் பரவலை தடுத்தோம்!
செய்தியாளர்: How different from the previous government's was your approach to dealing with your immediate challenge the covid-19 pandemic?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பே கொரோனா கட்டுப்பாட்டு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டேன். முதலமைச்சர் பொறுப்பேற்றதும் 24*7 என எங்கள் அரசு ஓய்வறியாது மக்கள் நலனில் அக்கறை செலுத்தியது. ‘வார் ரூம்’ அமைத்து செயலாற்றினோம். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கிட போர்க்கால வேகத்தில் செயல்பட்டு, சீராக்கினோம். படுக்கைகள் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கினோம். தடுப்பூசி போடுவதை இயக்கமாக மாற்றினோம். தொற்று நோய் மரணங்களும் பெருமளவில் குறைக்கப்பட்டன. ஊரடங்கிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது. இது பேரிடர் காலத்தை தி.மு.க. அரசு கையாண்ட முறை. அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக லட்சணத்திற்கு, விளக்குமாறு, ப்ளீச்சிங் பவுடர், மாஸ்க் ஊழல்களே சாட்சி.
செய்தியாளர்: How cooperative has the Centre been with the state on Covid management in releasing funds and Vaccines? Is TN getting its due share of vaccines? what's the status of the Integrated Vaccine Complex in Chengalpet?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஒன்றிய அரசிடம் ஒவ்வொன்றையும் தொடர்ந்து வலியுறுத்திப் பெற்றோம். தடுப்பூசி ஒதுக்கீடும் மிகக்குறைவுதான். தட்டுப்பாட்டு நிலையை பிரதமர் வரை எடுத்துக் கூறி, தமிழ் நாட்டிற்கான பங்கைப் பெற்றோம். உயிர்காக்கும் பிரச்சினையிலேயே நாங்கள் சளைக்காமல் போராடிப் போராடிப் பெற வேண்டிய நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.
மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்பாடே ஜி.எஸ்.டி.!
செய்தியாளர்: On another point of contention with the Centre, GST, what are your plans?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இப்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி. என்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடு என்பது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு. பறிக்கப்பட்ட இந்த உரிமையில் மாநிலத்தின் வரிப் பங்கை ஒன்றிய அரசு பாகுபாடின்றி, காலநிரல் படி, முறையாகத் தருவதில்லை. பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய வரிப்பங்கை முழுமையாகத் தரவேண்டும். வரி வருவாயை மாநில அரசுகளே கையாளும் காலம் மீண்டும் அமைய வேண்டும்.
சட்டத்தில் இருப்பதை சொல்வது எப்படித் தவறாகும்!
செய்தியாளர்: As for Centre state relationship, why did you start off on a confrontationist note -- First ‘Ondriya Arasu’, then the draft Indian Ports Bill? Do you see a threat to the federal structure?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தான் ஒன்றிய அரசு என்கிறோம். அப்படித்தான் சட்டத்திலேயே இருக்கிறது. அதை அப்படியே சொல்வது எப்படித் தவறு ஆகும்? மாநில நலன்களைப் பறிக்கும் திட்டங்களை எதிர்க்கிறோம். மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டால் அது கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்திவிடும்; வலுப்படுத்துவதாக அமையாது.
செய்தியாளர்: Would such a stand make it difficult for TN? Did the Palanisamy government's friendly ties with the Centre help the state?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தனது நாற்காலி பறிபோய் விடாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்றிய அரசாங்கத்துக்கு நிரந்தரக் கொத்தடிமையாகக் கிடந்தார் பழனிசாமி. இதனை நட்பாக நீங்கள் நினைப்பது தவறு. அது நட்பல்ல; சுயநல வஞ்சக நாடகம். ‘ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருப்பார் கலைஞர்' என்று பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் சொன்னதைப் போல நடப்போம்! எங்களைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டுக்கான உரிமைகளை வாதாடிப் பெறுவோம். கிடைக்காமல் போனால் போராடிப் பெறுவோம். இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் நிலை பெற்று உயர பாடுபடுவோம்.
இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்க வைத்த ‘தமிழ்நாடு பார்முலா’!
செய்தியாளர்: What will be your role in bringing together the opposition parties across the country, something which Mamata has been calling for?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலேயே தி.மு.க. உருவாக்கிய வெற்றிகரமான ‘தமிழ்நாடு ஃபார்முலா' இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ஃபார்முலா இன்று இந்திய அளவில் பேசு பொருளாகி வருகிறது. பேசுபொருள், செயல்பாட்டுக்கு வரும் போது மாற்றங்கள் நிகழும்.
நிதி நிலைமையை இந்த அரசு சீர்படுத்தும்!
செய்தியாளர்: Back home, how is TN's finances? What's its total debt? What are the plans to revive the state economy?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கடந்த 10 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக கடைசி 7 ஆண்டுகளில் தமிழ்நாடு எத்தகைய மோசமான நிதி மேலாண்மை காரணமாக கடினமான நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஏறத்தாழ 5 லட்சம் கோடி கடன் சுமையில் தமிழ்நாடு உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ஒவ்வொரு தமிழரின் மீதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சி ஏற்றியுள்ள கடன் சுமையைக் குறைப்பது தான் தி.மு.க. அரசின் நோக்கம். அதற்கேற்ப உற்பத்தி அதிகரிப்பு, தொழில் முதலீடுகள், சரியான அளவிலான வரியை முறையாக வசூலித்தல், ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய வரிப் பங்கினைப் பெறுதல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கேற்ற நிதி ஒதுக்கீடு இவற்றின் மூலமாக வரும் ஆண்டுகளில் நிதி நிலைமையை இந்த அரசு சீர்படுத்தும். அதன் முன்னோட்டம்தான் இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை.
தற்சார்பும் தன்னிறைவும் மிக்க மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிரும்!
செய்தியாளர்: What was the idea behind the Economic Advisory Council? How much is the government spending on the members' remuneration? When and what results do you expect?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அனைத்துத் துறையிலுமான சீரான முறையிலான வளர்ச்சி, சமூகநீதி அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்கள், நிதி நிலைமைக்கான சீர்திருத்தங்கள் இவை குறித்து அரசுக்கு தெளிவான - ஆக்கப்பூர்வமான - செயலாகத்திற்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது தான் உலகளாவிய புகழ் பெற்ற வல்லுநர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு. பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் செலவு என்பது நிச்சயமாக முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் ஊதாரித்தனமாக இருக்காது. குழுவின் ஆலோசனை அடிப்படையில், ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் பொருளாதார வளர்ச்சியிலும் நிதி நிலைமையிலும் தற்சார்பும் தன்னிறைவும் மிக்க மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிரும் என்று உறுதியாகக்கூற முடியும்.
என முதலமைச்சர் கூறியிருந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!